என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

புதன், 11 மே, 2011

மகாத்மாவைக் கொன்ற பகவத் கீதை

மகாத்மா காந்தியைக் கொன்றது கோட்சே என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் எத்தனை பேருக்குத் தெரியும் அவரைக் கொலைசெய்யத் தூண்டியது இந்துசமயப் "புனித நூல் பகவத் கீதை" என்பது?

விளக்குகிறேன்...

கோட்சே மராத்தியில் ஒரு பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்து இந்து சமயத்திலும் அதன் பண்பாட்டிலும் மிக்க ஆர்வமுடையவனாக மிக்க மரியாதையுடையவனாக இருந்தான். பலநாட்டு வரலாற்றைப் படித்து சோசியலிசம் கம்யூனிசம் என்பது என்ன என்று தெளிவாக அதன் கொட்பாடுகளைஎல்லாம் உணர்ந்திருந்தான்.


வங்கமாநிலத்தில் நவகாளி என்ற ஒரு ஊரில் சுக்ராவர்த்தி என்ற ஒரு இஸ்லாமியர் முதலமைச்சராக இருந்தார். அப்போது இந்து- முஸ்லிம் கலவரம் நடந்தது. காந்தியார் முஸ்லிம்களுக்கு ஆதரவாகத்தான் பேசிவந்தார்.  முதலமைச்சர் சுக்ராவர்த்தியை நவகாளியிளிருந்து தில்லிக்கு வரவழைத்து அங்கே ஒரு இந்துக் கோவிலில் அவரை வழிபடச் செய்தார். அதாவது அங்கு இஸ்லாமின் வேதநூலாகிய "திருக்குர்-ஆன்" படிக்கச் செய்தார்.  இச்செயல் பல இந்துக்களுக்குக் கோபமூட்டியது .  முக்கியமாக கோட்சேவுக்கு இச்செயல் காந்தியடிகள் மீது கடுமையான வெறுப்பு ஏற்படக் காரணமாக அமைந்து விட்டது.

இதே காந்தியார்  ஒரு மசூதிக்குள் சென்று பகவத் கீதையை படிப்பாரா? முஸ்லிம்கள் அதை அனுமதிப்பார்களா எனக் குமுறி, இந்துக்களின்  உணர்ச்சிகளோடு காந்தியார் விளையாடுவதைக் கடுமையாகக் கண்டித்தார். காந்தியார் இந்துக்களை அவமதிக்கிறார் என எரிச்சலடைந்தார்.

பின், 1947 , ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா முழுவதும் விடுதலை அடைந்த கொண்டாட்டத்தில் மூழ்கி இருக்க  கோட்சேயும் அவரது இந்து மகா சபையும் அதை எதிர்த்தனர்.. பீகார், வங்காளம் பஞ்சாப் மாநிலங்களில் முஸ்லிம் தீவிரவாதிகளால் இந்துக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்க பல்லாயிரக்கணக்கான இந்துக்கள் உயிருக்குப் பயந்து எங்கெங்கோ ஓடி அகதிகளாகிவிட்டனர்.  இத்தனை நடந்ததற்குப் பின்னும் காந்தியார் முஸ்லிம்களுக்கே சாதகமாக இருந்ததைக் கண்ட கோட்சே கொதித்தெழுந்தார். இனியும் இவரைச் சகித்துக்கொள்ளக் கூடாது என்று முடிவெடுத்தவர் ...

இந்து-முஸ்லிம் கலவரத்தின் உச்சகட்டத்தில், முஸ்லிம்களுக்கு ஆதரவாக காந்தி மேற்கொண்ட கடைசி உண்ணாவிரதத்தின்போது உடனடியாக இவரை முடித்துவிட வேண்டுமென்று முடிவெடுத்தார்.

காந்திமீது கோட்செவுக்குத் தனிப்பட்ட வெறுப்பு ஏதும் இல்லை. அடிப்படையில் காந்தியார் எளிமை, மனிதப் பண்பு ஆகியவற்றில் நல்ல 
மரியாதைக்குரியவராகத் தெரிந்தாலும், கோட்சேயின் கருத்தில் காந்தியின் அரசியல் அறிவுக்குப் போருந்தாததாகவே இருந்தது.  சத்தியம், அகிம்சை, இராட்டினம் என்றெல்லாம்  கூறிக்கொண்டு நடைமுறைக்கு ஒவ்வாத அரசியலில் ஈடுபட்டதாக வெதும்பினார். 
இவனின் சத்தியம் அகிம்சை, மனசாட்சி என்பதின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட கோட்பாடுகள் ஜின்னாவின் முன்னால் சுக்குநூறாகிச்  சிதறியபோதும், தன்னுடைய பிடிவாதத்தையோ, தவறுகளையோ ஒத்துக்கொள்ள முன்வரவில்லை காந்தி.  அதனால் கோபம் கொண்ட கோட்சே, காந்தி இல்லாத அரசியல்தான் நடைமுறைக்கு ஏற்றது என்று முடிவெடுத்து, காந்தி இல்லையென்றால் தான் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கமுடியும் என முடிவு செய்து காந்தியை முடித்து விட்டார்.


சரி, இதற்கும் பகவத் கீதைக்கும் என்ன தொடர்பென்று இந்நேரம் குழம்பி இருப்பீர்கள். 

காந்தியாரைக் கொன்ற வழக்கில் பஞ்சாப் நீதிமன்றத்தில் நாதுராம் விநாயக் கோட்சே என்ற இந்த மராத்திப் பார்ப்பனரும், அவரின் சகோதரர் கோபால் கோட்சேவும்  நீதிமன்றத்தில் கூறிய வாக்குமூலம் : " இந்துமத தர்மத்தின் படியே இக்கொலையைத் தாங்கள் செய்ததாக"வும், பகவத் கீதையின் தாக்கமே அந்தச் செயல்" என்றும்  கூறியுள்ளது  பதிவு செய்யப்பட்டுள்ளது.

சரி, அப்படி இவர்களைத் தன்வசமிழுத்த அந்த பகவத்கீதையில் என்னதான் கூறப்பட்டுள்ளது  என்பதையும் நோக்குவோமே:

அதாவது பகவத் கீதை போதிப்பதாவது  " இயற்கையே  ஒரு முடிவில்லாத கொலைக்களம். இங்கு கோடானு கோடி உயிர்கள் ஒன்றையொன்று கொன்றும் உயிப்பித்தும் வாழவும் வளரவும் செய்கின்றன. ஓர் உயிர் மற்றோர் உயிரை வாங்காமல் வாழவே முடியாது.  ஆதலால் கொலைக்களத்தில் நின்றுகொண்டு  கோழை போல தயங்காதே" என அர்ச்சுனனுக்குப் பல அறிவுரைகள்   கூறி நல்வழி காட்டி துரியோதனனைக் கொன்றார்.

ஆக, இளம்வயதிலேயே (22  வயதில் ) இந்துமத இயக்கமான ஆர். எஸ். எஸ். இயக்கத்தின் பொறுப்பாளராக இருந்த  கோட்சே வின் இந்து மதவெறி இந்தியா நாட்டின் தந்தை மகாத்மா காந்தியாரை பலியாக்கியது. 

இதுவே பகவத் கீதையின் தாக்கம்!



5 கருத்துகள்:

  1. niraya therinchikitten, tnx for useful info,, romba arumai

    பதிலளிநீக்கு
  2. காந்தி தாத்தாவை இதற்காகதான் சுட்டு கொன்னாங்களா,ஏன் காந்தி தாத்தா வை சுட்டு கொன்னாங்க என்று இதுவரைக்கும் நான் யோசிச்சே பார்க்கவில்லை. நல்ல தகவல்

    பதிலளிநீக்கு
  3. ayirakanakkaana inthukkal iranthathu patri ungalukku akkaraiyillai

    பதிலளிநீக்கு